துணை நிறுவனங்கள்

மஹிந்திரா ஃபைனான்ஸில், எங்கள் தொலைநோக்கு எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை முதன்மையாக வைத்திருப்பதுதான். இது எங்கள் குடும்பத்தை விரிவுபடுத்துவதற்கும், சிறந்த சேவைகளுடன் வழங்கப்படும் நிபுணத்துவத்தின் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்குவதற்கும் ஊக்கபடுத்துகிறது. எங்கள் மற்ற வெற்றிகரமான முயற்சிகள் யாதெனில், மஹிந்திரா இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் லிமிடெட் (எம்ஐபிஎல்), மஹிந்திரா ரூரல் ஹவுசிங் லிமிடெட் (எம்ஆர்எச்எஃப்எல்) மற்றும் மஹிந்திரா அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் (எம்ஏஎம்சிபிஎல்).

Brokers

நாம் நாளை என்ன ஆகும் என்று தெரியாத ஒரு நிச்சயமற்ற உலகில் வாழ்கிறோம். இச்சூழலில் நமது பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்ற தேவையைப் புரிந்துகொண்டு, எங்கள் துணை நிறுவனமான மஹிந்திரா இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் லிமிடெட் (எம்.ஐ.பி.எல்) 360o காப்பீட்டுத் தீர்வுகளை வழங்குகிறது, இது எங்கள் பல்வேறு நுகர்வோர் தளத்தின் பல்வேறு தேவைகளுக்கும் இடர் சுயவிவரங்களுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1.3 மில்லியன் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு நேரடிக் காப்பீட்டுத் தரகையும், அதிக எண்ணிக்கையிலான கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும் அதே வேளையில், நிறுவனம் ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாத காப்பீட்டு பிரிவுகளுக்கான பல திட்டங்களையும் வழங்குகிறது.

எம்.ஐ.பி.எல் தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் காப்பீட்டுத் தேவைகள் மற்றும் இடர் விவரங்களை மிகவும் விரிவான மற்றும் முறையான முறையில் புரிந்துகொள்வதன் மூலம் அவர்களுக்கு ஏற்றதை வழங்க உறுதிபூண்டுள்ளது. இது மிகவும் புதுமையான, செலவு குறைந்த மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டுத் தீர்வுகளைத் திட்டமிட உதவுகிறது. நாம் சமரசமற்ற மிக உயர்ந்த தரமிக்க நிறுவனம் என்பது, மதிப்புமிக்க ஐஎஸ்ஓ 9001: 2008 தர மேலாண்மை அமைப்புகளுக்கான சான்றிதழ் பெற்ற இந்தியாவில் உள்ள சில காப்பீட்டுத் தரகு நிறுவனங்களில் ஒன்றாகும் என்பதில் இருந்து தெளிவாகிறது.

காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) 2004 ஆம் ஆண்டு மே மாதம் எம்.ஐ.பி.எல்-க்கு நேரடித் தரகர் உரிமத்தை வழங்கியது, இது ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாத வணிகங்களில் நேரடிக் காப்பீட்டுத் தரகுகளை மேற்கொள்ள உதவுகிறது. கூடுதலாக, வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதற்கான உறுதிமொழியை நிறைவேற்ற எம்.ஐ.பி.எல் பல்வேறு பொது மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. செப்டம்பர் 2011-இல், எம்.ஐ.பி.எல் நிறுவனத்திற்கு ஐ.ஆர்.டி.ஏ கூட்டுத் தரகர் உரிமத்தை வழங்கியது, இதனால் நிறுவனம் நேரடித் தரகுடன் மறுகாப்பீட்டுத் தரகு வணிகத்தில் இறங்கியது. எம்.ஐ.பி.எல் மொத்தக் காப்பீட்டு இடர் தீர்வுகள் வழங்குநராக, வாடிக்கையாளர்களின் இடர் மேலாண்மையில் ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டுள்ளது.

எங்கள் நோக்கம்:

"2015-க்குள் இந்தியாவின் நம்பர் 1 காப்பீட்டுத் தரகராக ஆக வேண்டும்."

ஸ்ட்ராடெஜிக் பார்ட்னர்ஷிப்

செப்டம்பர் 2012-இல், மஹிந்திரா இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் லிமிடெட் (எம்.ஐ.பி.எல்) சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட லீப்ஃப்ராக் ஃபைனான்ஷியல் இன்க்ளூஷன் ஃபண்ட்-இன் துணை நிறுவனமான இன்க்ளூஷன் ரிசோர்சஸ் பிரைவேட் லிமிடெட் (ஐ.ஆர்.பி.எல்) மற்றும் அதன் தாய் நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட் (எம்எம்எஃப்எஸ்எல்) உடன் வரையறுக்கப்பட்ட ஒப்பந்தங்களில் கையியோப்பமிட்டுள்ளது இந்த பார்டர்ஷிப்பின் நோக்கம் ஐ.ஆர்.பி.எல்-இன் சர்வதேச அறிவு மற்றும் அனுபவத்தின் மூலம், குறிப்பாக வெகுஜன சந்தைகளில் காப்பீட்டை வழங்கக் குறைந்த விலை தொழில்நுட்பத் தீர்வுகளைப் பயன்படுத்துவதில் இந்தியாவின் கிராமப்புற மற்றும் ஓரளவு வளர்ச்சிபெற்ற நகர்ப்புறங்களில் உள்ள நுகர்வோருக்கு நிறுவனத்தின் சேவைகளை விரிவுபடுத்துதல் ஆகும். கூடுதலாக, உலகளவில் ஐ.ஆர்.பி.எல்-இன் நிபுணத்துவம் மற்றும் ரீஇன்சூரன்ஸ் அனுபவத்தின் மூலம், ஐ.ஆர்.பி.எல் நிறுவனத்தின் ரீஇன்சூரன்சஸ் தரகு வணிகத்தில் உதவ பல்வேறு உலகளாவிய ரீஇன்சூரர்களுடன் இணைக்க உதவும்.

லீப்ஃப்ராக் ஃபைனான்ஷியல் இன்க்ளூஷன் ஃபண்ட் என்பது ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நபர்களுக்குக் காப்பீடு செய்யும் நிறுவனங்களில் உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய முதலீட்டாளராகும், மேலும் இன்டர் நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐஎஃப்சி), ஈரோப்பியன் இன்வெஸ்ட்மெண்ட் பேங்க் (ஈஐபி), கேஎஃப்டபிள்யூ டெவலப்மெண்ட் பேங்க், ஜெர்மனி, எஃப்எம்ஓ டெவலப்மெண்ட் பேங்க் நெதர்லாந்து, முதலியன அதன் முதலீட்டாளர்களாவார்கள். லீப்ஃப்ராக் ஃபைனான்ஷியல் இன்க்ளூஷன் ஃபண்ட் வெகுஜன சந்தை காப்பீட்டில் சிறப்புக் கவனம் செலுத்துகிறது மற்றும் "அடுத்த கோடி" வளர்ந்து வரும் சந்தை நுகர்வோருக்குக் காப்பீட்டை வழங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. லீப்ஃப்ராக் ஃபைனான்ஷியல் இன்க்ளூஷன் ஃபண்ட் இரண்டு விஷயங்களில் அசாதாரணமானது, முதலில் சமூகத் தாக்கத்தின் மீதான கவனம் மற்றும் இரண்டாவதாக, காப்பீட்டின் மீதான அதன் கவனக் குவியம் ஆகும்.

மேற்கூறிய பரிவர்த்தனைக்கு உங்கள் நிறுவனம் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மற்றும் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றிலிருந்து தேவையான ஒப்புதல்களைப் பெற்றுள்ளது. மேற்கூறியவற்றின் விளைவாக, எம்.ஐ.பி.எல் இப்போது எம்.எம்.எஃப்.எஸ்.எல்-இன் 85% துணை நிறுவனமாகும். ஐ.ஆர்.பி.எல் எம்.ஐ.பி.எல்-இன் 15% பங்குகளை வாங்கியுள்ளது.

housing

உங்களுக்கென்று சொந்தமான ஒரு வீட்டை உருவாக்க வாழ்நாள் முழுவதும் ஆகலாம். மஹிந்திரா ரூரல் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (எம்.ஆர்.எச்.எஃப்.எல்) இன் நோக்கமானது, உங்கள் கனவு இல்லத்தை நோக்கிய உங்கள் பயணத்தின் காலத்தை சிறிது குறைக்க வேண்டும் என்பதே.

இந்தியாவின் மிகப்பெரிய கிராமப்புற வீட்டு நிதி நிறுவனமான எம்.ஆர்.எச்.எஃப்.எல், கிராமப்புற மற்றும் ஓரளவு வளர்ச்சிபெற்ற நகர்ப்புற நிலப்பரப்பை மாற்றுவதற்கான நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. எனவே வீட்டுக் கட்டுமானம், கொள்முதல், புதுப்பிப்பு, நீட்டிப்பு என, எம்.ஆர்.எச்.எஃப்.எல் பெரும்பாலான வீட்டு நிதி தேவைகளுக்குக் கடன்களை வழங்குகிறது. இன்று, இது 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமாகச் சேவை செய்கிறது மற்றும் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பீகார், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் 17,500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செயல்படுகிறது.

உண்மையில், கிராமப்புற இந்தியாவில் சில பெரிய மாற்றங்களுக்கு எம்.ஆர்.எச்.எஃப்.எல் பொறுப்பாகும். தொலைதூரக் கிராமங்களில் உள்ளவர்களிடம் தேவையான ஆவணங்கள் இல்லாததால் பெயர்பெற்ற நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. உள்ளூரில் கடன் வழங்குபவர்கள் அதிக வட்டி வசூலிப்பார்கள். இந்த நிலையில் எம்.ஆர்.எச்.எஃப்.எல் குறைந்தபட்ச ஆவணங்களுடன் மலிவான வீட்டுக் கடன்களை வழங்குகிறது.

இது நிலையற்ற கட்டமைப்பைக் கொண்ட பல “மண்சுவர்” வீடுகளை, செங்கல் மற்றும் காரை கொண்ட “சிமிண்ட்” வீடுகளாக மேம்படுத்த வழிவகுத்துள்ளது. வீடுகளின் தரையையும் கடினமான சிமென்ட் தளத்திலிருந்து டைல்களாக மாற்றியது. சுருக்கமாக, குடிசைகள் வீடுகளாகவும், கனவுகள் நனவுகளாகவும் ஆகிவிட்டன.

எம்.எம்.எஃப்.எஸ்.எல்-இன் துணை நிறுவனமான மஹிந்திரா ரூரல் ஹவுசிங் ஃபைனான்ஸ் ஏப்ரல் 9, 2007 அன்று நிறுவப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 13, 2007 அன்று தேசிய வீட்டுவசதி வங்கியிடமிருந்து வீட்டு நிதி நிறுவனத்தின் வணிகத்தைத் தொடங்க பதிவுச் சான்றிதழைப் பெற்றது. மஹிந்திரா & மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் (எம்.எம்.எஃப்.எஸ்.எல்) எம்.ஆர்.எச்.எஃப்.எல் பங்குகளில் 87.5% மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கி (என்.எச்.பி) மீதமுள்ள 12.5%-​​ஐக் கொண்டுள்ளது. என்.எச்.பி., இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ஆர்.பி.ஐ) முழுவதும் சொந்தமான துணை நிறுவனமாகும்.

எங்கள் இலக்கு:

"கிராமப்புற வாழ்க்கையை மாற்றியமைத்தல். ஒன்றாக இணைந்து"

நிறுவனம் வழங்கும் முழு அளவிலான சேவைகளையும் காண மஹிந்திரா ஹோம் ஃபைனான்ஸ் வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

நிறுவனங்கள் சட்டம், 1956-இன் கீழ் நிறுவப்பட்ட மஹிந்திரா ட்ரஸ்டீ கம்பெனி பிரைவேட் லிமிடெட், மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்டின் ட்ரஸ்டீ ஆகும். எங்கள் ட்ரஸ்டீ குழுவில், பாங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு. மனோகர் ஜி பைடே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. நரேந்திர மைர்பாடி, இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கழகத்தின் ஃபெல்லோ மெம்பர் திரு கவுதம் ஜி பரேக் மற்றும் டச்ஸ்டோன் கன்சல்டிங்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. டெபப்ரதா பந்டியோபாத்யய் ஆகியோர் உள்ளனர். (அவர்களின் முழு சுயவிவரத்தைக் காண இங்கே கிளிக் செய்க)

சொத்து மேலாண்மை நிறுவனம் பயன்படுத்தும் செயல்முறை மற்றும் அமைப்புகளை மேற்பார்வையிடுவதில் ட்ரஸ்டீ நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது மற்றும் இது முதலீட்டாளர்களின் நலனுக்காகச் செயல்படுகிறது.

நிறுவனங்கள் சட்டம், 1956-இன் கீழ் நிறுவப்பட்ட இது மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டு மேலாளராக உள்ளது. இது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (எம்.எம்.எஃப்.எஸ்.எல்) நிறுவனத்தின் முழுவதும் சொந்தமான துணை நிறுவனமாகும். எம்.ஏ.எம்.சி.பி.எல்-இன் இயக்குநர்கள் குழுவில் எம்.எம்.எஃப்.எஸ்.எல்-இன் நிர்வாக இயக்குநரும் சி.எஃப்.ஓ-வும் ஆன திரு வி. ரவி, இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் (ஐ.சி.ஏ.ஐ) ஃபெல்லோ உறுப்பினர் திரு. கவுதம் திவான், டீன் ஐ.ஐ.எம் திருச்சி பேராசிரியர் ஜி. சேது மற்றும் எம்.டி. மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஏ.எம்.சி.பி. எல்- திரு. அசுதோஷ் பிஷ்னோய் ஆகியோர் அடங்குவர்.

மஹிந்திரா ஃபைனான்ஸ் சி.எஸ்.ஆர் அறக்கட்டளை 2019 ஏப்ரல் 2-ஆம் தேதி மஹிந்திரா & மஹிந்திரா பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக நிறுவப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் திறன் மற்றும் நிலையான வாழ்வாதாரம், நோய் தீர்க்கும் மற்றும் நோய்த் தடுப்பு சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துதல்; பாதுகாப்பான குடிநீரின் சுகாதாரம் மற்றும் கிடைக்கும் தன்மை; பசி, வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிக்கும் நடவடிக்கைகள்; நிலைத்தன்மை சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலை, முதலியனவற்றுக்காக, ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாக நிறுவனங்கள் சட்டம் 2013 துணை சட்டம் 8-இன் கீழ் நிறுவப்பட்டது.

தொடர்பில் இருங்கள்

மஹிந்திரா & மஹிந்திரா நிதி சேவைகள் லிமிடெட்
4 வது மாடி, மஹிந்திரா டவர்ஸ்,
டாக்டர் ஜி.எம். போசலே மார்க்,
P.K. குர்னே ச k க், வோர்லி,
மும்பை 400 018.

இங்கே க்ளிக் செய்யவும் உங்கள் அருகாமையில் கிளையை கண்டறிய உள்ள மஹிந்திரா ஃபைனான்ஸ் உங்களைச் சுற்றி கிளை

Calculate Your EMI

  • Diverse loan offerings
  • Less documenation
  • Quick processing
Loan Amount
Tenure In Months
Rate of Interest %
Principal: 75 %
Interest Payable: 25 %

For illustration purpose only

Total Amount Payable

50000